Thursday, February 16, 2006

உதயா ...உள்ளத்தின் அலைகள்


உங்கள் இலக்கு ?

காலத்தை வென்று வாழும் இசைப்படைப்புகளை வழங்குவது.

குருவாக நினைப்பது ?

இசைத் துறையில் ஒவ்வொருவரிடமும் மற்றவரிடம் இல்லாத பல தனித்தன்மைகள் இருக்கலாம். அந்தத் தனித்தன்மைகளை அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்கிறேன் என்ற விதத்தில் அவர்களில் பலர் எனது குரு ஆகிறார்கள்.

அதுமட்டுமல்ல எனக்கு வாத்தியம் வாசிக்கின்ற கலைஞர்கள், என் உதவியாளர்கள், என் சவுண்ட் இன்ஜினியர்° இவர்களிடமும் பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ளுகிறேன் என்பதால் இவர்களும் எனது குருவே.

மிகவும் உயர்வாக நினைப்பது ?

என் தாய் தந்தையரை.

முதல் திருப்புமுனைக்கு காரணமானவர் ?

என் கலைத்திறனை இனங்கண்டு என்னை சென்னைக்கு அனுப்பி வைத்த என் கல்லூரி அதிபர் திரு. ராஜன் கதிர்காமர்.

உங்கள் முதல் விமர்சகர் ?

என் மனைவி

சாதனையாக நினைப்பது ?

மிகப் பெரிய சங்கீதப் பாரம்பரியத்திலிருந்து வராமல் கேள்வி ஞானத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இசையமைக்க வந்த என்னை - சுவிட்சர்லாந்தில் உள்ள ரெமி ரெக்கார்டு தன் கம்பெனிக்கு இசையமைப்பாளராக்கியது.

சோதனையாக நினைப்பது ?

நல்ல சங்கீதத்தை வழங்கியும் சில சமயங்களில் அது ரசிகர்களைப் போய்ச் சேராதபோது.இசை உலகில் 22 வருடங்கள் பல எதிர்நீச்சல்கள் போட்டு அயராது முயற்சித்தும் அங்கீகாரம் கிடைக்க மிகத் தாமதமானது.

நீங்கள் சந்தித்து ஆசை தீரப் பேச விரும்புவது ?

இசைஞானி இளையராஜாவுடன்.

அடிக்கடி கேட்க விரும்பும் பழைய பாடல் ?

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து என்ற பாடல் (படம் - புதிய பறவை)

இளையராஜாவின் இசையில் அடிக்கடி கேட்ட பாடல் ?

பன்னீர்புஷ்பங்கள் படத்தில் எ°.பி.பி. ஜானகி பாடிய, பூந்தளிர் ஆட...

பாதித்த மேலைத்தேச இசையமைப்பாளர் ?

ஜேம்° ஹார்னர்.

நன்றி சொல்ல வேண்டும் ?

...முதலில் இறைவனுக்கு.

அடுத்து பெற்றோருக்கு.

பல பொருளாதார நெருக்கடிகளிலும், இன்னல்களிலும் என் இசையை மட்டும் நேசிக்கும் என் மனைவிக்கு.

என் இசை - கவிதோழர்கள் ...

என்னோடு என்றும் எப்போதும் தோள் கொடுக்கும் என் இசைக் கலைஞர்கள் என்று இந்த பாசப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

சின்ன வயதில் உங்களை ஒரு நல்ல ரசிகனாக உருவாக்கியவை ?

எங்கள் வீட்டில் உயர்ந்த °தானத்தில் இருந்த பொன்னு கிராம போன் பெட்டி.

எங்கள் ஊர் அம்மன் கோயில் திருவிழாக்களில் கண்ணன் கோஷ்டி மற்றும் அருணா, ராஜன் இசைக் குழுக்கள் வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சிகள், சின்ன மணி அவர்களின் நவரசம் ததும்பும் வில்லுப்பாட்டு.

இலங்கை வானொலி சொன்ன இசையும் - கதையும். அது தேடிப்பிடித்து ஒலிபரப்பிய தரமான தமிழ்ப்பாடல்கள். உற்சாகமான அறிவிப்பு பாணியுடன் திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வழங்கிய இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள்...

பாடல்கள் பாடிய பாடகர்களிடமே இல்லாத பல அபூர்வ இசைத் தட்டுகளைக் கூட சேகரித்து வைத்திருந்து... துல்லியமான இசைப் பதிவு செய்து இசைத் தொண்டாற்றிய விக்டர் அன்ட் சன்° மற்றும், நியூ விக்டர்° நிறுவனங்கள்.

பெருமைப்பட்டது ?

சாகாவரம் பெற்ற சங்கீதங்களைப் படைத்த மெல்லிசை மனனர் எம்.எ°. விசுவநாதன் அவர்களும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களும் இணைந்து சமீபத்தில் என் இசையமைப்பில் இனிய காதலர்களே என்ற இசை ஆல்பத்துக்கு பாடியது.

------- ------ --------

உதயாவின் இசை வார்ப்பில் உருவான பாடல் பொக்கிஷங்கள்.....இவை...
கேட்டு ரசிப்போமா?


உதயாவின் இன்னிசையில் மலர்ந்த 'காதல் கடிதம்' திரைப் படப் பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

உதயாவின் இன்னிசையில் மலர்ந்த 'கண்டேன் சீதையை'' திரைப் படப் பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

உதயாவின் இன்னிசையில் மலர்ந்த 'உறவுக்கு மரியாதை'' திரைப் படப் பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

உதயாவின் இன்னிசையில் மலர்ந்த 'இனிய காதலர்களே' இசை ஆல்பத்தின் பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

------ ------ -------- --

உதயாவின் புகைப்படத் தோரணங்கள்..... இங்கே சொடுக்குங்கள்.

-------- ------ -----


'இந்து' [ HINDU] ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான
உதயாவின் சிறப்புப் பேட்டியைப் படிக்க...
இங்கே சொடுக்குங்கள்.

0 Comments:

Post a Comment

<< Home